விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் அங்குணுகொலபெலஸ்ஸ அவரை மற்றும் எண்ணைப் பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால் வயற் தினம் ஒன்று நடாத்த ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது
மதிப்பிற்குரிய விவசாய அமைச்சர் அமைச்சர் துமிந்த திசாநாயக மற்றும் விவசாய அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொஹான் விஜேகோன் அவர்கள் உட்பட பல உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் டிசம்பர் மாதம் 15ம் திகதி அவரை மற்றும் எண்ணைப் பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய வலாகத்தில் இந்த வயற் தினம் நடைபெற எதிர்பார்க்கப்படுகின்றது
அவரை மற்றும் எண்ணைப் பயிர் தொடர்பாக புதிய தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்தல் புதிய வர்க்கங்கள் தொடர்பாக விவசாயிகளை அறிவூட்டல் என்பவற்றை இங்கு நடாத்த எதிர்பார்ப்பதாக நிலையத்தின் மேலதிக விவசாயப் பணிப்பாளர் காமினி அபேவிக்ரம அவர்கள் தெரிவித்தார்