ஹம்பந்தோட்டை இடை மாகாண காரியாலயத்தின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட தும்பற் பாகல் மூலம் இம் முறை உயர் அறுவடை கிட்டியூள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன
மாவட்டத்தின் ரிதியகம, பெரலிஹெல, வீரவில, பதகிரிய போன்ற பிரதேசங்களில் 18 ஹெக்டயர்களில் இந்தப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இந்த காரியாலயத்தின் உதவி விசாயப் பணிப்பாளர் சமந்த குமார அவர்கள் தெரிவித்தார்
விவசாயத் திணைக்களத்தினால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சரியான தொழில்நுட்ப அறிவூ மற்றும் வழிகாட்டல்களினால் உயர் அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடிந்தது
பயிர்ச் செய்கை வேலைத் திட்டத்துக்காக 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்
இதற்கான தொழில்நுட்ப அறிவூறைகளை இடை மகாண காரியாலயம் வழங்கியூள்ளது
அதே போன்று விவசாயிகளுக்குத் தேவையான சந்தைப் படுத்தல் தொடர்பான வழகாட்டல்களையூம் வழங்குவதாக உதவி விவசாயப் பணிப்பாளர் சமந்த குமார அவர்கள் தெரிவித்தார்