விவசாய அமைச்சு விவசாயத் திணைக்களம் உட்பட சில அரச நிறுவனங்கள் இணைந்து தேசிய உணவூற்பத்தி வாரத்தை எதிர்வரும் 06ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது
தேசிய உணவூற்பத்திப் புரட்சி மற்றும் விவசாய வராம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாரத்தில் உணவூற்பத்தி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை முழு நாட்டையூம் முதன்மைப் படுத்தி நடைபெற இருக்கின்றது
ஒக்டேபர் மாதம் 05ம் திகதி மத சடங்குகளுக்கு முதலிடம் கொடுத்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது
இதற்கமைய ஒக்டோபர் 06ம் திகதி ஜனாதிபதி மைத்திறிபார சிறிசேன அவர்களும் விவசாய அமைச்சர் துமிந்த திசானாயக அவர்களினதும் தலைமையில் ஏர்ப்பூட்டு விழா மற்றும் விவசாய வாரம் நடைபெற இருக்கின்றது
இந்த தினத்தில் பல விவசாயம் செய்யூம் பிரதேசங்களில் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் தரிசு நிலங்களில் மீண்டும் பயிர்ச் செயகையை ஆரம்பித்தல், 2017/2018 பெரும் போகத்தில் 08 இலட்சம் வயல்களில் பயிர்ச் செய்கையை ஆரம்பித்தல், அந்தப் போகத்துக்குத் தேவையான விதை நெல்லை வழங்குதல், நெற் பயிர் செய்கை மேற்கொள்ள முடியாத நிலங்களில் வருடாந்தப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளல் போன்ற பல விவசாய நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன
ஒக்டோபர் 07ம் திகதி புதிய தொழில் முயற்சியாளர் தினம் எனப் பெயரிடப்பட்டுள்ளதோடு விவசாய அமைச்சினால் நடைமுறைப் படுத்தப் படும் சிதமு வேலைத் திட்டத்துடன் இணைந்திருக்கின்ற அங்கத்தவர்களுக்கு பயிர்ச் செய்கை தொடர்பான உதவிகள் வழங்கப்பட இருக்கின்றது
ஒக்டோபர் 08ம் திகதி சேதன விவசாயம் தொடர்பான பல நிகழச்சிகள் நடைபெற இருக்கின்றன
09ம் திகதி கல்வித் தினம் என்று பெயரிடப்பட்டுள்ளதோடு நாட்டின் பல்வேறு பாடசாலைகளில் பயிர் செய்கை தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும்
10ம் திகதி மீனவர் தினமாகவூம் 11ம் திகதி அரச சேவையாளர் தினம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது
12ம் திகதி தியவர தினம் என்று பெயரிடப்பட்டுள்ளது