விவசாய அமைச்சு உட்பட பல அரச நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்ற தேசிய உணவூ உற்பத்தி புரட்சி வாரத்தின் 06 வது தினம் இன்றாகும்.
தேசத்தின் உணவூற்பத்தியை அதிபரிப்பதோடு பயிர் செய்யப்படாத நிலங்களில் பயிர் செய்கையை மேற்கொள்ளும் நோக்கத்தோடு கடந்த 06ம் திகதி ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன அவர்களின் தலைமையில் தேசிய உணவூற்பத்தி புரட்சி வாரம் ஆரம்பிக்கப் பட்டது
இவ் வாரம் நாளை வரை நீடிக்கும்
06ம் நாளான இன்று அரச சேவையாளர் தினம் என்று பெயரிடப்பட்டுள்ளது
அதற்கமைய விவசாய அமைச்சின் கீழ் இயங்குகின்ற இட வசதி உள்ள நிறுவனங்களில் வீட்டுத்தோட்டத்தை ஆரம்பித்தல் இன்று நடைபெற இருக்கின்றது
சகல அரச ஊழியர்களுக்கும் தமது தோட்டத்தில் ஒரு பழக் கன்றை நட அறிவூறை வழங்கப்பட்டுள்ளது
பயிர் செய்யக் கூடிய சகல அரச இடங்களிலும் பயிர் செய்ய இன்றைய தினம் நடவடிக்கை எடுக்கப்படும்
சிறப்பான நுகர்வூ முறைகள் மற்றும் உணவூ வீணாதல் தொடர்பாக சகல அரச ஊழியர்களும் அறிவூட்டப்படுவார்கள்