தேசிய உணவூ உற்பத்தி புரட்சியூடன் இணைந்து மாகாண மட்டத்தில் பல விஷேட வேலைத் திட்டங்கள் நடை முறைபடுத்தப் பட்டுள்ளது
அதற்கமைய தெற்கு, கிழக்கு, மேற்கு, வடமேல் மகாணம், ஊவா மாகாணம் போன்ற மாகாணங்களில் இந்த வேலைத் திட்டம் நடைமுறைப் படுத்தப் படுகின்றது
பயிர் செய்கை புரட்சியின் கீழ் தெற்கு மகாணத்தை இலக்குப் படுத்தி அக்மீமன மற்றும் காலி பிரதேசங்களில் தரிசு நிலங்களில் பயிர் செய்கை மேற்கொள்ளப் பட்டது
அதே போன்று மேற்கு மகாணத்தில் ஹோமாகம பிரதேசத்தில் கடந்த 08ம் திகதி ஏர்ப் பூட்டு விழா நடைபெற்றது
கிழக்கு மகாணத்தில் திருகோணமலை 96 கொலணியில் ஏர்ப் பூட்டு விழா நடைபெற்றது
வட மேல் மகாணத்தில் கல்பிட்டிய தலவில தேவாலயத்திற்கு அருகில் பழக் கன்றுகளை விற்பனை செய்யூம் நிகழ்வூ 09ம் திகதி நடை பெற்றது